Tuesday, August 24, 2010

படித்ததில் ரசித்தது

வாழ்க தமிழ்

ஆஹா... இத்தனை நாட்கள் எவ்ளோ பெரிய உண்மைகள் தெரியாமல் இருந்திருக்கிறோம்.

இந்த பட்டியலில் இன்னும் சில விசயங்களை சேர்த்து கொள்ளலாம்.

பொதுவாக "சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்று ஒரு பழ மொழியும் உண்டு.ஆனால் உண்மை அது அல்ல...
"சேல் அகட்டிய மாதரை நம்பாதே" என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே.. என்பது தான் உண்மை பொருள்.

"மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று ஒரு பொருள் உண்டு.
அது "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

எறும்பு தின்றால் கண்கள் நன்றாக தெரியும் என்பார்கள்...
அதுவும் உண்மை அல்ல... எறும்பு தின்னி என்னும் உயிரினத்திற்கு கண்கள் நன்றாக தெரியும் என்பதுதான் உண்மை.

ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பார்கள். அதுவும் உண்மை அல்ல...
ஆயிரம் முறை போய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதே உண்மை.

அடியாத மாடு படியாது என்றும் சொல்வார்கள். அது மாட்டை அடிக்கவேண்டும் என்று புரிந்து கொள்கிறார்கள்,
அதன் உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

இதில் ஏதேனும் தவறு இருந்தால் தெரியப்படுத்தவும்

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி

(கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே...?) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.



ஆறிலும் சாவு நூறிலும் சாவு

மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.



உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
வயிறு தொப்பையாக இல்லாமல், சுருங்கி.. அதாவது ஒட்டி இருத்தல் பெண்களுக்கு அழகு என்பதாகத்தான், இதன் பொருளை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் உண்மைப் பொருள்
உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.


நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

நாயைக் கண்டால் அடிப்பதற்குக் கல்லைக் காணவில்லை. கல் இருக்கும் போது நாய் அங்கு இல்லை என்பது போலத்தான் பொருள் கொண்டு இப் பழமொழி தற்போது பிரயோகிக்கப் படுகிறது.


இதன் உண்மைப் பொருள்.

பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி... சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று.

அதற்குச் சுவைஞன் சொன்ன பதில்
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
என்பதாக இருந்தது.
அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

நன்றி

Wednesday, August 18, 2010

Statistics Assignment/Homework help

Want to learn statistics!! I can assist your doubts and assessment with A+ rating

In Statistics I am familiar with topics like
1. Summarizing Data
2. Probability
3. Random Variables
4. Probability Distributions
5. Generating Functions
6. Joint Distribution
7. Condition Expectation
8. Central Limit Theorem
9. Sampling and Sampling Inference
10. Confidence Intervals
11. Hypothesis Testing
12. Correlation and Regression
13. Analysis of Variance
14. Data Analysis

I am familiar with tools like Minitab, Megastat, SPSS, Excel and Statpro.
You can get in touch with me through vadivelan0403@gmail.com. Will respond at the earliest.

Friday, July 30, 2010


Happy Friendship Week!!

A friend gives hope when life is low…

A friend is a place when you have nowhere to go…

A friend is honest…

A friend is true…

A friend is precious…

&

That my friend is…

Visit Us @ www.MumbaiHangOut.Org

.

.

.

You

join ghoomar group

cid:4174994465000006@web35005.mail.mud.yahoo.comcid:4174994465000011@web35005.mail.mud.yahoo.com